Ticker

6/recent/ticker-posts

இங்கிலாந்து நடிகர் இத்ரிஸ் எல்பாவுக்கும் கொரோனா தொற்று

கொரோனா வைரஸ் சோதனையில் தொற்று உறுதியானதாக  பிரபல இங்கிலாந்து நடிகர்  இத்ரிஸ் எல்பா கடந்த  திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.

"இன்று காலை நான் கொவிட் 19 பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டேன்" என்று அவர்
டுவிட்டரில்  எழுதியுள்ளார்.

"நான் நன்றாக இருக்கிறேன், எனக்கு இதுவரை எந்த அறிகுறிகளும் இல்லை, ஆனால் வைரஸ் தொற்றுக்கு  நான் ஆளாகியிருப்பதைப் பற்றி  கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து நான் தனிமைப்படுத்தப்பட்டேன்."

இத்ரிஸ் எல்பா கடந்த வெள்ளிக்கிழமை தான் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறியுள்ளார்.

பொது இடங்களைத் தவிர்க்குமாறு அரசாங்கம் கூறியதைத் தொடர்ந்து திங்களன்று இங்கிலாந்தில்  தியேட்டர்கள் மூடப்பட்டன.  1,500 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுகள்  உறுதி செய்யப்பட்டுள்ளன, இதன் விளைவாக இங்கிலாந்தில் இதுவரை  55 பேர் இறந்துள்ளனர்.


Post a Comment

0 Comments