Ticker

6/recent/ticker-posts

இரண்டு வாரங்களுக்கு மூடப்படும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம்!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் இன்று (17) முதல் இரண்டு வாரங்களுக்கு மூடப்படும் என்று ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்   ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

இதன் மூலம்  இரண்டு வாரங்களுக்கு இலங்கைக்கு வர திட்டமிடப்பட்டிருந்த  அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களில் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான மக்கள் இலங்கைக்கு வந்துள்ளதாகவும், அவர்களை தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு  உட்படுத்துவதற்காக  அவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பது  அரசாங்கத்திற்கு  கடுமையான பணியாக இருப்பதாகவும்   ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments