Ticker

6/recent/ticker-posts

சாரதி அனுதிப்பத்திரம் விநியோகம், பரீட்சைகள் இடைநிறுத்தம்!

( ஐ. ஏ. காதிர் கான் )

   சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.
   
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்கும் முகமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
   
இதற்கமைய, வேரஹெர போக்குவரத்துத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் அல்லது ஏனைய போக்குவரத்துத் திணைக்கள மாவட்ட அலுவலகத்திற்கு வருகை தருவது, மார்ச் 31 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
    
மார்ச் 17ஆம் திகதி முதல் மார்ச் 31ஆம் திகதி வரை, சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பிலான  சேவைகள் செயல்படாது எனவும், ஏற்கனவே தினம் ஒதுக்கப்பட்ட அனைத்து சாரதி அனுமதிப்பத்திர எழுத்து மூலப் பரீட்சைகள் மற்றும் பிரயோகப் பரீட்சைகள் அனைத்தும்  இரத்துச் செய்யப்படுவதாக இதன் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
   
இக்கால எல்லைக்குள், சாரதி அனுமதிப்பத்திரங்களைப்  புதுப்பித்தல், உள்ளிட்ட தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள பரீட்சைகள் தொடர்பில் எடுக்கவுள்ள தீர்மானங்களை விரைவில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.


Post a Comment

0 Comments