Ticker

6/recent/ticker-posts

சீனாவில் கொரோனா வைரஸ் குறைந்து வரும் நிலையில் ஹென்டாவைரஸ் தொற்று?

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறைந்து வரும் நிலையில், சீன பிரஜை ஒருவர் மற்றொரு வைரஸ் தொற்றான ஹென்டாவைரஸ் hantavirus  என்ற தொற்று நோயினால் இறந்துள்ளதாக  சீன  ஊடகங்கள்  செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவின் யுனான் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த திங்களன்று பேருந்தில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது இறந்துவிட்டதாக  சீனாவின் தேசிய ஆங்கில மொழி செய்திப் பத்திரிகை  குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இறந்த நபரோடு அதே பேருந்தில் பயணித்த 32 பயணிகளையும் சீன அதிகாரிகள் பரிசோதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹென்டாவைரஸ்கள் முக்கியமாக கொறித்துஉண்ணும் பிராணிகளால் பரவும் வைரஸ் ஆகும்.

ஹென்டாவைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு சோர்வு, காய்ச்சல் மற்றும் தசை வலி ஏற்படும். ஹென்டாவைரஸ்  எலிகள் மற்றும்  கொறித்து உண்ணும் பிராணிகள் மூலம் பரவுகிறது  என்று அல் அரேபியா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments