Ticker

6/recent/ticker-posts

புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கி அதன் ஊடாக மாற்றத்தை ஏற்படுத்துவதே எமது எதிர்பார்ப்பாகும் - தேசிய மலையக முன்னணி தெரிவிப்பு



(க.கிஷாந்தன்)

மலையகத்தில் கல்விப்புரட்சி மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்தி மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்காகவும், புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கும் நோக்கிலுமே தேசிய மலையக முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு வழங்கியுள்ளது என்று முன்னணியின் பொது செயலாளரும், நுவரெலியா பிரதேச சபை உறுப்பினருமான பெருமாள் அற்புதராஜா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ள தேசிய மலையக முன்னணி, முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர் இராதாகிருஷ்ணனை (13.03.2020) அன்று சந்தித்து தமது முடிவை உத்தியோகப்பூர்வமாக அறிவித்தது.


அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட பெருமாள் அற்புதராஜா மேலும் கூறியதாவது,

" பொதுத்தேர்தல் தொடர்பில் எமது  நிர்வாகக்குழு கூடி ஆராய்ந்தது. எமது சமூகத்தின் எதிர்காலம், வாழ்வாதாரம், பொருளாதாரம், கல்வி போன்ற விடயங்கள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், மலையக பாராளுமன்ற உறுப்பினர்களின் கடந்தகால செயற்பாடுகளும் ஆராயப்பட்டன.பாராளுமன்றத்துக்கான வருகை, மலையகம் சார்ந்த பகுதிகளுக்கான சமூகம்சார்ந்த சேவைகள் போன்றவற்றை தமிழ் முற்போக்கு கூட்டணி சிறப்பாக செய்துள்ளது. 

எனவேதான் எமது சமூகத்தின் எதிர்காலத்தை சுபீட்சமாக மாற்றுவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு வழங்கும் முடிவு எடுக்கப்பட்டது.

கல்விசார்ந்த சிறந்த சமூகத்தை கட்டியெழுப்பு, புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கி அதன் ஊடாக மாற்றத்தை ஏற்படுத்துவதே எமது எதிர்பார்ப்பாகும்." - என்றார்.

Post a Comment

0 Comments