கோவிட் -19 வைரஸ் பரவியதைத் தொடர்ந்து நாட்டில் இடம்பெற்று வந்த இரத்த தான முகாம்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதால் தேசிய இரத்த மாற்று மையத்தின் இரத்த சேமிப்பு வெகுவாகக் குறைந்துவிட்டதாக தேசிய இரத்தமாற்று மையத்தின் இயக்குநர் டொக்டர் லக்ஷ்மன் எதிரிசிங்க அறிவித்துள்ளார்.
தற்போது இரத்த வங்கியில் உள்ள இருப்பு இரண்டு நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருப்பதாகவும், அடுத்த வாரத்தில் இரத்த தட்டுப்பாடு ஒரு பிரச்சினையாக மாறும் என்றும் அவர் தெரிவித்வித்துள்ளார்.
மஹரகம அபேக்ஷா (புற்றுநோய்) மருத்துவமனை மற்றும் பொரளையில் உள்ள லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தினமும் இரத்தம் வழங்கப்பட வேண்டும். மேலும், தேசிய இரத்தமாற்று மையத்தில் ஐந்து நாட்களுக்கு மட்டுமே இரத்தத்தை சேமிக்க முடியும்.
தலசீமியா நோயாளிகளுக்கு தினமும் இரத்த மாற்றம் செய்யப்பட வேண்டும். நாடு முழுவதும் 105 இரத்தமாற்று மையங்கள் உள்ளன.
இரத்த மையங்கள் தினசரி 4,000 யூனிட் இரத்தத்தை தினசரி இரத்ததான இரத்த முகாம்களிடமிருந்து சேகரிக்கின்றன. கோவிட் -19 வைரஸ் பரவுவதாலும், ஊரடங்கு உத்தரவு விதிப்பதாலும், இரத்த தான முகாம்களை நடத்துவதற்கான சாத்தியம் இல்லாமல் இருக்கிறது.
எனவே இரத்த தானம் செய்ய விரும்புபவர்கள் நாராஹேன்பிட்டவில் உள்ள தேசிய இரத்த மாற்று மையத்திற்கு அல்லது இலங்கையின் தேசிய இரத்தமாற்று சேவைக்கு சென்று இரத்த தானம் செய்யலாம்.
இரத்த தானம் செய்ய விரும்புகிறவர்கள் 011-5332153 அல்லது 011-5332154 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.
ஒவ்வொரு நாளும் காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இரத்த தானம் செய்யலாம் என்று தேசிய இரத்தமாற்று மையத்தின் இயக்குநர் டொக்டர் லக்ஷ்மன் எதிரிசிங்க அறிவித்துள்ளார்.

0 Comments