Ticker

6/recent/ticker-posts

கொரோனாவைக் கட்டுப்படுத்தும் ஜப்பானிய Favipiravir மருந்து!

ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட Favipiravir என்ற மருந்து கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பெரும்பங்கு வகிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

உலக அளவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்குகிறது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 18 ஆயிரத்தைத் தாண்டியது. இத்தாலியில் கொரோனா வைரசுக்கு ஒரே நாளில் 475 பேர் உயிரிழந்துள்ளனர். பிரிட்டனிலும் உயிரிழப்பு அதிகரிப்பதால், பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

FUJIFILM நிறுவனத்தின் துணை நிறுவனமான  புஜிஃபில்ம் டோயாமா கெமிக்கல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த மருந்தால் வுகானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 340 பேர் குணமடைந்திருப்பதாக சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரானோவால் நுரையிரல் பாதிப்பு ஏற்பட்டவர்களில் Favipiravir மருந்து கொடுக்கப்பட்ட 90 சதவீதம் பேருக்கு உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபவிபிராவிரை Favipiravir உருவாக்கிய புஜிஃபில்ம் டோயாமா கெமிக்கல் நிறுவனத்தின் வர்த்தக பங்குகள் மருத்துவ பரிசோதனைகளைத் தொடர்ந்தும், சீன அதிகாரிகளின்  பாராட்டுதலுக்குப் பின்னரும் அதிகமாக உயர்ந்து வருவதாக  இங்கிலாந்தின் த கார்டியன் இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments