Ticker

6/recent/ticker-posts

தமிழகத்தில் ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. நேற்று ஒரே நாளில் 266 பேருக்கு கொ‌ரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னையில் மட்டும் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொ‌ரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், கோயம்பேடு சந்தை மூலம் கொரோனா பரவியதே அதிகமாக உள்ளது. 
தமிழகத்தில் இன்று ஆண்கள் 377 பேரும், பெண்கள் 150 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இதுவரை 2,392 ஆண்கள், 1,157 பெண்கள், திருநங்கை ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களின் ஒரே நாளில் 30 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் 2,107 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு மேலும் ஒருவர் இறந்துள்ளார். 
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Post a Comment

0 Comments