எம்பிலிபிட்டிய நகர சபைக்கு சொந்தமான வாகனத்தில் சென்று ஜேவிபி உறுப்பினா் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் எம்பிலிபிட்டிய நகர சபையின் தலைவர் தினேஷ் மதுஷங்க நேற்று (30) எம்பிலிப்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தினேஷ் மதுஷங்க ஸ்ரீலங்கா பொதுஜன ஐக்கிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
ஜனதா விமுக்தி பெரமுனவின் அமைப்பாளரான சியதோிஸ் கொடிதுவக்கு என்பவரை தினேஷ் மதுஷங்க தாக்கியதாக முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்குள்ளான ஜனதா விமுக்தி பெரமுனவின் அமைப்பாளரான சியதோிஸ் கொடிதுவக்கு எம்பிலிப்பிட்டிய மாவட்ட வைத்தியசாலையின் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான மாநகர சபை தலைவர் கடந்த 30 ஆம் திகதி அம்பிலிபிட்டிய பொலிஸில் சரணடைந்த போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

0 Comments