Ticker

6/recent/ticker-posts

தன்னை பூசா சிறையிலிருந்து வேறு சிறைக்கு மாற்ற கஞ்சிபானை இம்ரான் கோரிக்கை!


பாதாள உலக கும்பல் முக்கிய அங்கத்தவர் என்று கூறப்படும் முகமது வசிம் முகமது இம்ரான் என்ற  கஞ்சிபானை இம்ரானை தெற்கு மாகாணத்திற்கு வெளியே உள்ள மற்றொரு சிறைக்கு மாற்ற வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவில்  சிறைச்சாலைகளின் பதில் ஆணையாளர் ஜெனரல் துஷாரா உபுல்தேனியா, சிறைச்சாலைகளின் பூசா கண்காணிப்பாளர், நீதி அமைச்சர் நிமல் சிறிபால  டி சில்வா, அமைச்சின் செயலாளர் மற்றும் 9 பேர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மனுதாரர் முகமது இம்ரான் தனது உயிருக்கு இருக்கும் அச்சுறுத்தல் காரணமாக பூசா சிறையில் இருக்க முடியாது என்று கூறியுள்ளதோடு தன்னை தெற்கு மாகாணத்திற்கு வெளியே வேறு சிறைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் சார்பாக  நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும்,  விசாரணை செய்வதற்கு சிறை அதிகாரிகள் தவிர மற்ற ஆயுத விசாரணைக் குழுக்கள்  கஞ்சிபானை இம்ரானின் சிறைக்குள் நுழைவதைத் தடுக்கும் தடை உத்தரவு ஒன்றை வழங்குமாறும் மேற்படி மனுவில்  கோரப்பட்டுள்ளது..

Post a Comment

0 Comments