Ticker

6/recent/ticker-posts

மனித தலையை சுட்டு சாப்பிட்ட இளைஞர் !

 


இந்தியா ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மனித தலையை சுட்டு சாப்பிட்ட சைக்கோ இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விசாகப்பட்டினம் மாவட்டம், ரெல்லி வீதியில், ஒதுக்குப்புறத்தில் பாழடைந்த வீடு ஒன்று உள்ளது. இந்த வழியாக யாரும் சென்றதில்லை. இந்நிலையில், நேற்று காலை அவ்வீட்டின் ஜன்னல் வழியாக புகை வந்தள்ளது. அந்த வீதியால் சென்றவர்கள் இதைக் கண்டு அங்கு சென்று பார்த்தபோது, ஒரு இளைஞரும் மற்றுமொரு பெண்ணும் ஒரு மனித தலையை தீயில் சுட்டு தின்றுக் கொண்டிருந்ததை கண்டுள்ளனர்.

ஊர்மக்களைக் கண்டவுடன், அவர்கள் தப்பியோடியுள்ளனர்.இதையடுத்து,  பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது . அங்கு விரைந்த பொலிசார், இது குறித்த விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

விசாரணைகளில் தப்பி ஓடியவர், ராவேல பூடி ராஜு, 20, என்ற இளைஞர் என்றும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்  என்றும் தெரிய வந்துள்ளது. 

இது தொடர்பாக விசாரணை ஆரம்பித்த விசாகப்பட்டினம் பொலிஸார் மனித தலை இடுகாட்டிலிருந்து எடுத்து வரப்பட்டதா அல்லது வேறு ஏதாவது சம்பவம் நிகழ்ந்துள்ளதா என்ற கோணத்தில் விசாரணையை ஆரம்பித்துள்ளதோடு,  அந்த சைக்கோ இளைஞரையும்  கைது செய்துள்ளனர்.  

Post a Comment

0 Comments