Ticker

6/recent/ticker-posts

யாழ்ப்பாணம் உடுவில் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களால் தாக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு!


யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களின் தாக்குதலில் காயமடைந்த இரு இளைஞர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையாக நின்றிருந்த வேளையில் சட்டவிரோதமான முறையில் எரிபொருள் வழங்கப்பட்ட சம்பவத்தை காணொளியில் பதிவு செய்தமைக்காக கோபமடைந்த  எரிபொருள் நிரப்பு நிலைய  ஊழியர்கள் இரு இளைஞர்களையும் தாக்கியுள்ளனர். 

யாழ்ப்பாணம் உடுவில்,  செப்பாலை கோயிலடியைச் சேர்ந்த செல்வரத்தினம் பிரசாந் (வயது 23) என்பவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊழியர்கள் மூவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments