தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளை செலுத்தி சட்டத்தை மதிக்காத பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் விபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டில் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் போது சந்தேகத்திற்குரிய பொலிஸ் கான்ஸ்டபிள் குடிபோதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இவர் பெம்முல்ல பொலிஸ் பிரிவில் கடமையாற்றியவர் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கான்ஸ்டபிள் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொத்தலாவல நுழைவாயிலில் நுழைந்துள்ளார். அதிவேக நெடுஞ்சாலையில் சுமார் இரண்டு கிலோமீற்றர் தூரம் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்த அவர் அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த காருடன் மோதியுள்ளார். விபத்தில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் சேதமடைந்தன.
குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தா் தனது மோட்டார் சைக்கிளில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே இருந்த ஒருவர் தனது மொபைல் போனில் படம் பிடித்துள்ளார்.
சந்தேகத்திற்குரிய பொலிஸ் கான்ஸ்டபிள் சப்புகஸ்கந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபா் இன்று (27) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸாா் தொிவித்துள்ளனா்.

0 Comments