Ticker

6/recent/ticker-posts

PMB அரிசி இன்று சந்தைக்கு வருகிறது!


நெல் சந்தைப்படுத்தல் சபையினால் தற்போதுள்ள நெல் கையிருப்புகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட அரிசிப் பொதிகளின் உத்தியோகபூர்வ விற்பனை இன்று (27) ஆரம்பிக்கப்படவுள்ளது.

சந்தையில் அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்தி நுகர்வோருக்கு உயர்தர அரிசியை வழங்கும் நோக்கில் நெல் சந்தைப்படுத்தல் சபை PMB அரிசி' என்ற வர்த்தக நாமத்தில் இந்த அரிசியை வெளியிடவுள்ளது.

5 மற்றும் 10 கிலோ அரிசி மூட்டைகள் விற்பனை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நெல் சந்தைப்படுத்தல் சபையானது சதொச விற்பனை நிலையங்கள் மூலம் மாதாந்தம் 10,000 மெற்றிக் தொன் அரிசியை சந்தை தேவையின் அடிப்படையில் அதன் அனைத்து நெல் கையிருப்புகளையும் பயன்படுத்தி வெளியிட எதிர்பார்க்கிறது.

நெல் சந்தைப்படுத்தல் சபை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையை விட சற்றே குறைந்த விலைக்கு  இந்த அரிசியை விற்பனை செய்ய எதிர்பார்ப்பதாக அதன் தலைவர் நீல் டி அல்விஸ் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments