Ticker

6/recent/ticker-posts

டீசல் திருடிய புகையிரத தொழில்நுட்ப உத்தியோகத்தா்!


நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரத என்ஜினில் இருந்து டீசலை திருடிய புகையிரத ஊழியர் ஒருவரை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் சிலாபம் புகையிரத நிலையத்தில் கடமையாற்றும் உதவி புகையிரத தொழில்நுட்ப உத்தியோகத்தர் என்பதுடன் அவரிடமிருந்து 15 லீற்றர் டீசலும் கைப்பற்றப்பட்டுள்ளது.

நேற்று காலை கொழும்பு நோக்கி புறப்படவிருந்த புகையிரதம் சிலாபம் புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அதன் இயந்திரத்தில் இருந்த எரிபொருளை சந்தேக நபர் திருடியுள்ளார்.

புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை அடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டு சிலாபம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments