எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் பத்திரிகை விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பிற்கு வெளியில் உள்ள சில பகுதிகளில் பல நாட்களாக எந்தப் பத்திரிகையும் வரவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளிதழ்கள் அச்சிடப்பட்ட பின்னர் கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் போக்குவரத்து சேவைகள் மூலம் நேரடியாக விநியோகம் செய்யப்பட்டு அங்கிருந்து வெளியூர்களுக்கு தனியார் விநியோகஸ்தர்களால் விநியோகம் செய்யப்படுகிறது.
அதற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு எரிபொருள் பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் பத்திாிகை விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலை தொடருமானால் அடுத்த வாரம் முதல் பத்திரிகை விநியோகம் முற்றாக நிறுத்தப்படும் அபாயம் உள்ளதாக பத்திரிகை விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

0 Comments