இன்று (04) முதல் வவுனியா, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் ஒரு நாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவை அமுல்படுத்தப்படுகிறது.
முன்னதாக, கொழும்பில் உள்ள குடிவரவுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் மாத்திரமே ஒரு நாள் சேவை இயங்கி வந்தது.
இதேவேளை, வெளிவிவகார அமைச்சின் கொன்ஸியூலா் சேவைகள் இன்று திங்கட்கிழமை முதல் வெள்ளி வரை வாரத்தின் அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்கு திறந்திருக்கும்.
யாழ்ப்பாணம், மாத்தறை, கண்டி, திருகோணமலை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களிலுள்ள பிராந்திய கொன்ஸியூலா் அலுவலகங்களும் வழமை போன்று இயங்குகின்றன.

0 Comments