Ticker

6/recent/ticker-posts

கருப்பு சந்தையில் இருந்து கைப்பற்றப்பட்ட 15 பவுசர் எாிபொருள் !


15 பவுசர்கள் உள்ளடங்கும்  எாிபொருளை சேமித்து கருப்பு சந்தையில் விற்பனை செய்த நபா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

பொலிஸ் மற்றும் விஷேட அதிரடிப்படையினா் நடாத்திய தேடுதலின் மூலம் இந்த சட்டவிரோத செயல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பதுக்கி வைக்கப்பட்டு கருப்பு சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படவிருந்த ஒரு லட்சம் 100,000 லீற்றருக்கும் அதிகமான எரிபொருள் பொலிஸாராலும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினராலும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது சுமார் 15 பவுசர்கள்  மூலம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இறக்கப்படுவதற்கு சமமானதாகும்.

பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்த எரிபொருட்களில் 27,001 லிட்டர் பெட்ரோல், 56,323 லிட்டர் டீசல் மற்றும் 19,195 லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியவை அடங்கும்.

நாடு முழுவதும் இடம்பெற்ற 953 சோதனைகளில் இந்த எரிபொருள் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் எண்ணிக்கை 884 என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

Post a Comment

0 Comments