Ticker

6/recent/ticker-posts

தொலைக்காட்சியில் தோன்றிய அா்ஜுன் மகேந்திரன்!


பிணைமுறி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் பிலிப்பைன்ஸில் உள்ள CNN தொலைக்காட்சிக்கு  நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளாா். 

சிங்கப்பூரில் இருந்து இணைய மார்க்கமாக இந்த நேர்காணலில் கலந்து கொண்ட அவர் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மகேந்திரன் மற்றும் பிரதிவாதிகள் 10 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு நிரந்தர மூவரடங்கிய உயர் நீதிமன்றம் கடந்த 4ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது. எதிா்வரும் 21 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. நல்லாட்சிக் காலத்தில் பிரதமா் ரணில் விக்ரமசிங்கவின் உதவியுடன் அா்ஜுன் மகேந்திரன் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றாா். 

திருமண வைபவமொன்றில் கலந்து கொள்வதற்காக அா்ஜுன் மகேந்திரன் வெளிநாடு செல்வதாகவும் கட்டாயம் அவா் நாட்டுக்கு திரும்புவாா் என்றும் பாராளுமன்றத்தில் ரணில் விகரமசிங்க உறுதியளித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தொடா்ந்து நீதிமன்றத்தைத் தவிர்த்து மறைந்திருக்கும் அா்ஜுன்  மகேந்திரனுக்கு இன்டர்போல் சிவப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது, மேலும் மகேந்திரன் சிங்கப்பூரில் இருப்பதை இன்டர்போல் 2018 மே மாதம்உறுதிப்படுத்தியது.

Post a Comment

0 Comments