Ticker

6/recent/ticker-posts

பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவா் பலி!


இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை தடியால் தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்ட நபா் ஒருவா்  பொலிஸாரால் சுடப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த சந்தேக நபர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சந்தேக நபர் தலகஸ்பே பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர்.

நேற்று (23) பிடிகல, தலகஸ்பே மாஹேன பகுதிக்கு முறைப்பாடு ஒன்றினை மேற்கொள்வதற்காக சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை குறித்த சந்தேகநபர் தாக்கி காயப்படுத்தியுள்ளதுடன், பிடிகல பொலிஸ் உத்தியோகத்தர்கள் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள அங்கு சென்றிருந்தனர்.

சந்தேகநபர் கைது செய்ய சென்ற பொலிஸாரை குறித்த நபா் தாக்க முயன்றதாகவும், அதன் போதே மேற்படி துப்பாக்கி பிரயோகத்தை  பொலிஸாா் நடாத்தியதாகவும் பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.


Post a Comment

0 Comments