Ticker

6/recent/ticker-posts

நடிகர் ஜெக்சன் என்டணி தீவிர சிகிச்சை பிரிவில்!


வாகன விபத்தில் சிக்கிய பிரபல  நடிகர் ஜெக்சன் என்டணி சத்திரசிகிச்சையின் பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

நேற்று (02) இரவு அனுராதபுரம், தலாவ, மொரகொடவில் கெப் வண்டியுடன் காட்டு யானை மோதியதில் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் ஜெக்சன் என்டணி மற்றும் இருவர் பலத்த காயம் அடைந்தனர்.

அவர்கள் இருவரும் தற்போது அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Post a Comment

0 Comments