Ticker

6/recent/ticker-posts

ரணிலுக்கு ஆப்பு? சலுகை இல்லாவிட்டால் எதிா்த்து வாக்களிப்போம்! மொட்டு அணி சவால்!


ரணிலின் அரசாங்கத்தால் நியமிக்கப்படவுள்ள இராஜாங்க அமைச்சர்களுக்கு சிறப்புரிமையும் சலுகைகளும் வழங்கப்படாவிட்டால் எதிா்வரும் 30ம் திகதி நிதியமைச்சா் என்ற ரீதியில்  ரணில் முன்வைக்கும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கப்போவதாக   பொதுஜன பெரமுனவின் பசில் ராஜபக்சவை ஆதரிக்கும் குழு தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இன்னும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளது.

இராஜாங்க அமைச்சர்களுக்கு கடந்த காலங்களில் இருந்தது போல ஒரு பிரத்தியேகச் செயலாளர், ஒரு ஊடகச் செயலாளா் மற்றும்  மூன்று ஒருங்கிணைப்புச் செயலாளர்கள் இருக்க வேண்டும் எனவும், அவர்கள் ஐவருக்கும் தனித்தனி வாகனங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், இராஜாங்க அமைச்சர்களுக்கு ஐந்து அலுவலக ஊழியர்களும், மூன்று வாகனங்களும் மற்றும் அமைச்சர்கள் அனுபவிக்கும் இதர சலுகைகளும் உரிமைகளும் இருப்பதாகவும்  கூறியுள்ளனா். மேலும், அவர்களின் சம்பளம், அமைச்சர்களின் சம்பளத்துக்கு இணையாக இருக்கவேண்டுமெனவும்  அவா்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர்களின் பட்டியலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது தயாரித்து வருவதாக குறிப்பிடும் அந்த  ஊடகம், எத்தனை இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்பது குறித்து இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லையென்றும் கூறியுள்ளது.

இடைக்கால வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாகவே இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாலும், சர்வகட்சி ஆட்சியை அமைப்பதிலும் சற்று சிக்கல் ஏற்பட்டுள்ளதாலும், புதிய அமைச்சரவையை நியமிப்பதில் ரணிலுக்கு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.



Post a Comment

0 Comments