Ticker

6/recent/ticker-posts

"சே" குவேராவின் மகன் கமிலோ குவேரா #Camilo_Guevara காலமானார்.

உலக வரலாற்றில் இடம் பிடித்த, புரட்சியின் அடையாளமாக கருதப்படும் எர்னஸ்டோ "சே" குவேராவின் மகன் கமிலோ குவேரா #Camilo_Guevara காலமானார்.

60 வயதான கமிலோ குவேரா மாரடைப்பால் உயிரிழந்ததாக கியூபா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கியூபப் புரட்சியில் பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து போராடிய தனது தந்தையின் வாழ்க்கையை ஆவணப்படுத்துவதற்காக தனது காலத்தின் பெரும்பகுதியை கமிலோ குவேரா அர்ப்பணித்து வந்துள்ளாா்.
அவர் வெனிசுலாவுக்கு பயணம் மேற்கொண்டபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அலீடா மார்ச் மற்றும் சே குவேரா தம்பதியருக்கு பிறந்த 4 பிள்ளைகளில் மூன்றாவது மகன்தான் இந்த கமிலோ குவேரா.
ஹவானாவில் உள்ள சே குவேரா ஆய்வு மையத்தின் இயக்குனராக கமிலோ குவேரா பணியாற்றி வந்துள்ளார்.

Post a Comment

0 Comments