08 கிலோ 500 கிராம் பெறுமதியான 17 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த நான்கு பயணிகளை கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் இன்று காலை கைது செய்துள்ளதாக சுங்கப் பேச்சாளர் சுதத்த சில்வா தெரிவித்துள்ளாா்.
ஓமான் எயார்லைன்ஸின் WY-371 விமானத்தில் ஓமானின் மஸ்கட்டில் இருந்து இன்று காலை 07.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை இவா்கள் வந்தடைந்துள்ளனர்.
இவர்களில் கொழும்பு கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வசிக்கும் இளம் தம்பதியரும் 50 வயதுடைய நபரும் தமது ட்ரோலியில் 07 கிலோ 500 கிராம் எடையுள்ள 03 தங்கத் தகடுகளை கவனமாக மறைத்து வைத்து சட்டவிரோதமான முறையில் எடுத்து வந்துள்ளனர்.
விமான நிலைய ட்ரொலியில் தங்கத் தகடுகளை கவனமாக மறைத்து வைத்திருந்தவர் 50 வயது மதிக்கத்தக்க நபர் என்பதை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும், கொழும்பு மட்டக்குளிய பிரதேசத்தைச் சோ்ந்த 35 வயதுடைய ஆண் ஒருவர் சுமார் ஒரு கிலோகிராம் எடையுள்ள நகைகள் மற்றும் நான்கு தங்க பிஸ்கட்டுகளை தனது உடம்பினுள் மறைத்து வைத்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கடத்தி வந்துள்ளார்.
இவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து பிரகடனப்படுத்தப்படாத பசுமைப் பாதை (Green channel) ஊடாக பயணித்த போது, பயணித்த விதத்தில் சந்தேகம் ஏற்பட்டதால் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது இவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

0 Comments