கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அளவீடுகளின் படி பணவீக்கம் மேலும் அதிகரித்துள்ளது.
ஆகஸ்டில் 64.3% ஆக இருந்த பண வீக்கம், செப்டம்பரில் 69.8% ஆக அதிகரித்துள்ளது என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை அறிவித்துள்ளது.
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின்படி, ஆகஸ்ட் மாதத்தில் 93.7 வீதமாக இருந்த உணவு வகை பணவீக்கம் செப்டெம்பர் மாதத்தில் 94.9 வீதமாக அதிகரித்துள்ளது.
கடந்த மாதம் 50.2 சதவீதமாக இருந்த உணவு அல்லாத பணவீக்கம் இந்த மாதம் 57.6 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி ஆகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் 70.2 சதவீதமாக இருந்தது.

0 Comments