மியன்மார் அரசாங்கம் 1,000 டொன் அரிசியை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
இந்த அரிசி தொகை கடந்த 2ம் திகதி யன்கொன் நகரில் வைத்து இலங்கையிடம் கையளிக்கப்பட்டதாக அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அப்போது பேசிய அந்நாட்டின் வர்த்தக அமைச்சர் - யு ஆங் நயிங் ஓ, (U Aung Naing Oo) இந்த நன்கொடை மியன்மார் மக்களுக்கும் இலங்கை மக்களுக்கும் இடையிலான நேசத்தின் அடையாளமாகும் என்று கூறியுள்ளாா்.
இந்த நன்கொடை, இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டார்.
தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இது போன்ற நன்கொடை மிகவும் முக்கியமானது என தெரிவித்த மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜே.எம்.பண்டார, மியன்மார் அரசாங்கத்திற்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

0 Comments