தொடா் மழை காரணமாக ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
களுத்துறை, கேகாலை, குருநாகல், நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, அடுத்த 24 மணித்தியாலங்களில் அத்தனகல்ல, களு, களனி, ஜின் மற்றும் நில்வலா ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக அந்த ஆறுகளில் ஏற்கனவே நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments