அரசுக்கு செலுத்த வேண்டிய 167 கோடி வரியை செலுத்தாமல் மோசடி செய்த காரணத்திற்காக டபிள்யூ. எம். மெண்டிஸ் கம்பனியின் உாிமையாளரான அர்ஜுன் அலோசியஸுக்கு இன்று (02) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் தாக்கல்செய்யப்பட்ட வழக்கு தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் பிரதான குற்றவாளிகளில் ஒருவரான அர்ஜுன அலோசியஸுக்கு சொந்தமான டபிள்யூ. எம். மெண்டிஸ் நிறுவனம் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய மேற்படி வரியை செலுத்தத் தவறியமை தொடர்பான வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த காலங்களில் வரி செலுத்தத் தவறிய நிலையில் டபிள்யூ. எம். மெண்டிஸ் நிறுவனத்திற்கு கலால் திணைக்களம் மீண்டும் உரிமத்தை வழங்கியிருப்பதாக கடந்த மாதம் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

0 Comments