சவூதி அரேபியாவின் விண்வெளி ஆணையம் தனது முதல் விண்வெளி திட்டத்தை கடந்த வியாழக்கிழமை தொடங்கியுள்ளது.
2023 ஆம் ஆண்டில் முதலாவதாக ஒரு பெண்ணை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை இது உள்ளடக்கியிருப்பதாக சவுதி கெஸட் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
நீண்ட கால மற்றும் குறுகிய கால விண்வெளி பயணங்களை மேற்கொள்வதற்கு திறமையான பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக இந்த திட்டம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கான அறிவியல் பரிசோதனைகள் மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இந்த சவுதி விண்வெளி ஆராய்ச்சித் திட்டம் உதவும் என்றும், சவுதி அரசின் “இலட்சிய இலக்கு 2030” என்ற திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக சவுதி விண்வெளி நிகழ்ச்சித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்து.
சவூதி அரேபியாவின் முதலாவது விண்வெளி பயணத்தில் சவூதியைச் சோ்ந்தஒரு பெண்ணே பயணிப்பாா் என்றும், அவரது விண்வெளி பயணம் சவூதி தேசத்திற்கு ஒரு வரலாறாக அமையும் என்றும் அந்த செய்தி குறிப்பிடுகிறது.
හිරුණිකා රනිල්ට කියපු දේ..! ஹிருணிகா ரணிலுக்கு சொன்ன செய்தி..!
Video link: https://www.youtube.com/watch?v=6ptPorfdLhs&t=45s

0 Comments