குற்றவியல் விவகாரங்களில் பரஸ்பர சட்ட உதவி பெற்றுக்கொள்வது தொடர்பாக இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.கூட்டு விசாரணைகளை மேற்கொள்வதில் ஏற்படும் சிரமங்களைத் தவிர்ப்பதற்காகவும், இரு நாடுகளுக்குமிடையிலான பரஸ்பர உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்காகவும் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
0 Comments