கடந்த ஆண்டில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட முப்பத்தொன்பது வழக்குகள் தொழில்நுட்ப பிழைகளை காரணம் காட்டி திரும்பப் பெறப்பட்டுள்ளன.
இவற்றில், 2015 முதல் 2018 வரையிலான நல்லாட்சி காலத்தில் முப்பத்திரண்டு வழக்குகளும், 2015 க்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்ட ஐந்து வழக்குகளும், 2019 இல் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
தொழில்நுட்ப பிழைகளை தவிர்ப்பதற்காகவும், புதிய வழக்குகளை தாக்கல் செய்யவும் இந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது எனக் கூறப்பட்ட போதிலும், இதுவரை மீள எந்த வழக்குகளையும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்யவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
எனினும், தொழில்நுட்பப் பிழைகளைத் தவிர்த்து மீண்டும் வழக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கணக்காளா் நாயகம் பரிந்துரை செய்துள்ளார்.
கடந்த 2019 மற்றும் 2020 ஆண்டுகளில், பல்வேறு காரணங்களுக்காக ஆணையம் பத்து வழக்குகளை திரும்பப் பெற்றுள்ளது.

0 Comments