புர்கினா பாசோ இராணுவத் தளபதி இப்ராஹிம் ட்ராரே அந்நாட்டின் இராணுவ ஆட்சித் தலைவரான போல்-ஹென்றி டமிபாவை பதவி நீக்கம் செய்துள்ளார்.
அரசாங்கத்தை கலைத்ததாகவும், அரசியலமைப்பு மற்றும் இடைக்கால சாசனத்தை இடைநிறுத்தியதாகவும், தேசிய தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்ட அறிக்கையில் இப்ராஹிம் ட்ராரே தெரிவித்துள்ளார்.
நாட்டில் மோசமடைந்து வரும் ஆயுதமேந்திய எழுச்சியை சமாளிக்க போல்-ஹென்றி டமிபாவினால் இயலாமல் போனதன் காரணமாக இராணுவ அதிகாரிகள் குழு அவரை நீக்க முடிவு செய்ததாக இப்ராஹிம்ட்ராரே வெள்ளிக்கிழமை மாலை கூறினார்.
மேற்கு ஆபிரிக்க நாடான புா்கினா பாசோ நாட்டில் எட்டு மாதங்களில் இது இரண்டாவது ஆட்சிக் கவிழ்ப்பாகும். மோசமான பாதுகாப்பின்மையால் ஏற்பட்ட விரக்தியின் காரணமாகவும், முன்னாள் ஜனாதிபதி ரோச் கபோரை அகற்றி ஓா் ஆட்சிக் கவிழ்ப்பில் மூலம் கடந்த ஜனவரியில் தமிபா ஆட்சியைப் பிடித்தார்.
அல்- காஇதா மற்றும் ஐஎஸ்ஐஎல் ஆகிய தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய சில கிளர்ச்சிக் குழுக்களைக் கட்டுப்படுத்த புர்கினா பாசோ கடந்த பல வருடங்களாக போராடி வருகிறது.
நாட்டின் 40 சதவீதமான பகுதிகள் புர்கினா பாசோ அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லாததால், நாட்டில் பாதுகாப்பு குறித்த அச்சுறுத்தல்கள் தொடா்ந்தும் நிலவி வருவதாக சா்வசதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

0 Comments