அமெரிக்காவும் மேற்கத்திய உலகமும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், சீனாவின் இராணுவ மற்றும் வா்த்தக ரீதியிலான எழுச்சி பல நாடுகளால் ஓா் அச்சுறுத்தலாக பாா்க்கப்படுகிறது.
சீனா தனது முதலாவது விமானம் தாங்கி கப்பலை உருவாக்கிய நிகழ்வின் பின்னா், அமொிக்கா உள்ளிட்ட மேற்கத்தைய நாடுகள் தாம் புதிய ஒரு சவாலுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக உணா்கின்றன.
ஆசியாவில் அதிவேகமாக வளர்ந்து வரும் இந்த இராணுவ மற்றும் வா்த்தக சவால்கள் குறித்து பூகோள ரீதியில் கவலைகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.
உலக நாடுகளின் எதிா்ப்பையும் கண்டனங்களையும் கருத்திற் கொள்ளாமல், நிலம் மற்றும் கடல் ரீதியாக தனது இராணுவ மற்றும் வா்த்தக வலிமையை சீனா கட்டமைத்து வருகிறது.
தனது கடல்சாா் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக "முத்துக்களின் சரம்" (String of Pearls) என்று அழைக்கப்படும் கடல்சாா் மூலோபாய ஆதிக்கத் திட்டத்தை சீனா பல கடற் பிராந்தியங்களில் செயற்படுத்தி வருகிறது.
சீனாவின் இந்த ‘முத்துக்களின் சரம்’ என்ற திட்டத்தை, கடற் பிராந்தியங்களில் தனது ஆதிக்க வலையமைப்பின் நுண் அரசியல் கோட்பாட்டை அடிப்படையாகக் வைத்து சீனா செயற்படுத்தி வருகிறது.
சீனாவின் நிலப்பகுதிக்கும் சூடான் துறைமுகத்திற்கும் இடையில் இந்தியப் பெருங்கடலை தொட்டு நிற்கும் நாடுகளில் சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் திட்டத்தில் இறங்கியிருக்கிறது.
முக்கிய கடற்பிராந்தியங்களில் இராணுவ மற்றும் வணிக வசதிகளின் வலையமைப்பை சீனா கச்சிதமாக பின்னி வருகிறது. பல நாடுகளில் துறைமுகங்களை புதிதாக நிா்மாணித்தும், துறைமுகங்களை மேம்படுத்தியும் அவற்றை இலகுவாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வியூகத்தை வகுத்து வருகிறது.
இலங்கையில் உருவாக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகமும், கொழும்பு துறைமுக நகரமும் இதற்கு சிறந்த எடுத்துக் காட்டுகளாகும். சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (China–Pakistan Economic Corridor)) மற்றும் அதன் ஒரு பட்டி ஒரு பாதை (The Belt and Road Initiative) திட்டத்தின் ஊடாக, சீனா நில மற்றும் கடல்வழி வர்த்தக வழிகள் பலவற்றை அமைத்து அதன் பெரிய இராணுவ இலட்சியத்தை நோக்கி நகா்ந்துக் கொண்டிருக்கிறது.
இந்தியப் பெருங்கடலையும் ஏனைய முக்கிய கடற் பிராந்தியங்களையும் இலக்கு வைத்து சீனா தனது நகா்வுகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய கிழக்கின் எண்ணெய் வயல்களில் ஊடாக இடம்பெறும் எண்ணெய் வர்த்தகத்தின் 60 சதவீதம் இந்தியப் பெருங்கடல் ஊடாகவே நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல், சீனாவின் எண்ணெய் இறக்குமதியில் 80 சதவீதம் மலாக்கா நீரிணை வழியாக இடம் பெறுகிறது. எனவே, மலாக்கா நீரிணையோடு மட்டும் நின்று விடாமல் மாற்று வழிகளையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரும் திட்டத்தில் சீனா இறங்கியிருக்கிறது.
மலாக்கா நீரிணையைச் சுற்றியுள்ள மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுடன் நட்புறவை வளர்த்துக் கொள்ள சீனா எப்போதும் ஆர்வமாகவே இருந்திருக்கிறது. மலாக்கா நீரிணை இந்தியா, சீனா, ஜப்பான், தாய்வான், தென் கொரியா ஆகிய ஆசியாவின் பெரும் பொருளாதார நாடுகளை இணைக்கின்ற முக்கிய ஜலசந்தியாகும்.
இந்த நீரிணை இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே ஒரு முக்கியமான கடல் வர்த்தகப் பாதையாகவும் இருக்கிறது. என்றாலும் சீனா, மலாக்கா நீரிணையில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் செயற்பாடுகளை அவ்வப்போது செய்து வருகிறது.
இந்தியாவும் மலாக்கா நீரிணையில் ஒரு மூலோபாய பிடியை வைத்து செயற்பட்டு வருகிறது. 1971ம் ஆண்டு இடம்பெற்ற போரின் போது மலாக்கா நீரிணை ஊடாக பாகிஸ்தானுக்கு உதவ சீனா முயற்சிகளை மேற்கொண்டது. இதன் போது மலாக்கா நீரிணையைத் மறித்து, தடுக்கப்போவதாக அப்போது இந்தியா சீனாவை அச்சுறுத்தியது.
1999 ஆம் ஆண்டு கார்கில் போரின்போது, கராச்சி துறைமுகத்தை தனது கடற்படையைப் பயன்படுத்தி தடுத்து நிறுத்திய இந்தியா, பாகிஸ்தானுக்கான விநியோகத்தை முற்றாக முடக்கியது. இவ்வாறு கடல் ரீதியாக சீன, இந்திய முறுகல் நிலை தொடா்ந்து வந்திருக்கிறது.
அண்மைய காலங்களில் சீனாவின் கடல்சாா் ஆதிக்கம் பல கடற் பிராந்தியங்களில் பன் மடங்கு பெருகி வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.
தற்போது, மியன்மாரின் கியாக்பியு துறைமுகம் சீனாவின் ஆதிக்கத்தில் உள்ளது. வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள இந்த துறைமுகம் மோதல்களின் போது இராணுவ ரீதியில் பயன்படக் கூடிய, கடல்சார் வசதிகளை சீனாவுக்கு வழங்கியுள்ளது.
சீனா தனது அதிகமான முதலீட்டை மியன்மாரில் செய்துள்ளது. மியன்மாரின் கியாக்பியூ துறைமுகத்திலிருந்து (Port of Kyaukpyu) சீனாவிலுள்ள குன்மிங் (Port of Kunming) துறைமுகத்தை இணைக்கும் 2400 கி.மீ எரிவாயு குழாய் இணைப்பு திட்டம் இதற்கு சிறந்த ஒரு உதாரணமாகும்.
இந்தியக் கடற்கரைக்கு அருகாமையில் மற்றொரு முக்கிய சீன இருப்பு கொகோ தீவுகளில் உள்ளது. கொகோ தீவுகள் (The Coco Islands) அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு வடக்கே அமைந்துள்ளன. இந்தத் தீவுகள் மோதல்களின் போது மூலோபாய ரீதியாக மிகவும் முக்கியமானவையாக கருதப்படுகின்றன. சீனா அங்கும் தனது ராணுவ தளத்தை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
பங்களாதேஷிலுள்ள சிட்டகொங் துறைமுகத்தையும் சீனா தனது முதலீட்டால் மேம்படுத்தியுள்ளது. சிட்டகொங் துறைமுகம் வங்காள விரிகுடாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மையத்தில் அமையப் பெற்றுள்ளது.
இலங்கையின் தென் பகுதியில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா உருவாக்கியதுடன், அதனை ஒரு நூற்றாண்டு கால குத்தகைக்கு சீன நிறுவனமொன்று பெற்றிருக்கிறது. 2017ம் ஆண்டு இதற்கான குத்தகை ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட்டது.
பாகிஸ்தானில் சீனா உருவாக்கிய குவாதர் துறைமுகத்தை ஒரு பனிப்பாறையின் நுனியாகவே இந்தியா பாா்க்கிறது. குவாதார் துறைமுகம் அமைந்துள்ள ஆழத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பு நுண் அரசியல் புதைந்து கிடப்பதாக இந்தியா நம்புகிறது.
தெற்காசியா முழுவதும் கடற்படைத் தளங்கள் மற்றும் உளவுத்துறை நிலையங்களை நிறுவுவதற்காக சீனா இந்த முத்துக்களின் சரம் திட்டத்தைப் பயன்படுத்துவதாக பல நாடுகள் சந்தேகத்தை வெளியிட்டு வருகின்றன. இதன் மூலம் பல நாடுகளின் கண்டனத்திற்கும் விமா்சனத்திற்கும் சீனா உள்ளாகி வருகிறது..
கடந்த ஓாிரு தசாப்தங்களாக, சீனா இந்தியப் பெருங்கடலில் அமையப்பெற்றுள்ள நாடுகளுடன் நெருக்கமான இராஜதந்திர உறவுகளைப் பேணி வருகிறது. பல மில்லியன் டொலர்களை அந்த நாடுகளுக்கு கடனாக வழங்கியுள்ளது. அந்த நாடுகளுடன் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டு வருகிறது. அந்த நாடுகளில் சீன அரசுக்கு சொந்தமான பல நிறுவனங்கள் தொழிற்பட ஆரம்பித்திருக்கின்றன.
பாகிஸ்தானில் குவாதர் துறைமுக திட்டம் சீன நிதியுதவியினால் நிா்மாணிக்கப்பட்ட மிகப் பொிய திட்டமாகும். இலங்கையில் ஹம்பாந்தோட்டையிலும் (Port of Magampura Mahinda Rajapaksa), பங்களாதேஷில் சிட்டகொங்கிலும், மியன்மாாில் சிட்வேயிலும், (Port of Sittwe) கியாக்பியுவிலும் (Port of Kyaukpyu) உருவாக்கப்பட்டுள்ள துறைமுகங்கள், சீனாவின் கடல்சாா் ஆதிக்கம் விாிவுபடுத்தப்பட்டுள்ளமைக்கு சிறந்த சான்றுகளாக பாா்க்கப்படுகின்றன.
சீனாவின் கடல்சாா் திட்டங்கள் சீன மக்கள் விடுதலை இராணுவக் கடற்படையினாின் கட்டமைப்பில் இருப்பதாகவும், சீனக் கடற்படையின் நவீனமயமாக்கல் திட்டங்களைப் பார்க்கும்போது, இந்தத் துறைமுகங்கள் ஒரு நாள் நிரந்தர கடற்படைத் தளங்களாக மாற்றப்படக் கூடிய சாத்தியங்கள் வரலாம் என்றும் பிராந்திய நாடுகள் அச்சம் கொள்கின்றன.
சீனாவால் கட்டமைக்கப்படும் இத்தகைய தளங்கள் உலகளாவிய கடல் பாதைகளுக்கு அச்சுறுத்தலாகவும், சவாலாகவும் அமையும் என்றும் பல நாடுகள் கருதுகின்றன. இந்த மதிப்பீடுகள் மிகவும் மிகைப்படுத்தப்பட்டவை என்று சீனா ஒரே வாா்த்தையில் மறுப்புத் தொிவித்து வருகிறது.
2017ம் ஆண்டு ஜுலை மாதம் 12ம் திகதி, சீனா தனது இராணுவத் தளத்தை ஆபிாிக்காவிலுள்ள ஜிபூட்டியில் அமைத்தது. இது சீனாவின் முதலாவது வெளிநாட்டு கடற்படைத் தளமாகும். சுமார் எட்டு இலட்சம் மக்கள் வாழும் ஜிபூட்டியில் சீனா 2016 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இந்த இராணுவ தளத்தை உருவாக்கத் தொடங்கியது.
ஜிபூட்டி, சூயஸ் கால்வாய்க்கு செல்லும் வழியில் செங்கடலின் நுழைவாயிலில் அமைந்துள்ள மூலோபாய பெறுமதிமிக்க நிலமாகும். சீனாவின் எண்ணெய் இறக்குமதியில் அரைவாசி ஜிபூட்டிக்கு அப்பால் உள்ள மண்டெப் நீரிணை (Mandeb Strait ) வழியாக இடம்பெறுகிறது. இது மத்திய தரைக் கடலையும் இந்தியப் பெருங்கடலையும் இணைக்கின்ற நீரிணையாகும்.
கடற்கொள்ளையர்களை தடுப்பதற்காகவும், ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காத்தல் பணிகளுக்கு மற்றும் மனிதாபிமான நிவாரணப் பணிகளுக்கு உதவியளிப்பதற்காகவே ஜிபூட்டியின் இராணுவ தளத்தைப் பயன்படுத்துவதாக சீனா கூறி வருகிறது. ஜிபூட்டியின் இராணுவ தளத்திற்கு சீனா ஆண்டுக்கு 20 மில்லியன் டொலர்களை வாடகையாக செலுத்தி வருகிறது.
தென் சீனக் கடலிலும் சீனா தனது இருப்பை நிலை நிறுத்தியுள்ளது. இந்த பகுதிக்கு பல நாடுகள் உரிமை கோரி வருகின்றன. மலேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், தாய்வான் எனப் பல நாடுகள் தென் சீனக் கடல்மீது சொந்தம் கொண்டாடுகின்றன. இந்தக் கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக இந்தியா கூறி வருகிறது.
தென் சீனக் கடலில் எரிவாயு, எண்ணெய் உட்பட பல இயற்கை வளங்கள் புதைந்துக் கிடக்கின்றன. உலகின் முக்கியமான கடல் போக்குவரத்துத் தடங்களில் இந்த தென் சீனக் கடலும் ஒன்றாகும். உலகின் மூன்றில் ஒரு கப்பல் போக்குவரத்துகள் இந்த தென் சீனக் கடல் வழியாகவே இடம்பெறுகின்றன.
பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மியான்மர் போன்ற நாடுகளில் உள்ள துறைமுகத் திட்டங்களுக்கு சீனா தனது முதலீட்டை செய்து அந்த நாடுகளின் கேந்திர முக்கியத்துமிக்க இடங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்தியப் பெருங்கடலில் இராணுவ ரீதியிலான ஒரு சுற்றி வளைப்பை சீனா செய்து வருவதாக இந்தியா அடிக்கடி குற்றம் சாட்டி வருகிறது.
சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட (CPEC) திட்டத்தின் மூலம் மேம்படுத்தப்பட்ட பாகிஸ்தானின் குவாதா் துறைமுகமும், இலங்கையின் தென் மாகாணத்திலுள்ள ஹம்பாந்தோட்டை நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகமும், பங்களாதேஷில் சிட்டகொங் துறைமுகமும்,மியன்மாா், மாலைதீவு போன்ற நாடுகளில் சீனாவின் செயற்பாடுகளும் தன்னை சுற்றி வளைக்கும் அச்சுறுத்தல்களாக இந்தியா பாா்க்கிறது.
கடல்சாா் ஆதிக்கத்தை தனது கைகளுக்குக் கொண்டு வரும் "முத்துக்களின் சரம்" திட்டத்தின் உதவியுடன் உலக நாடுகளின் மீது அச்சுறுத்தலை உருவாக்க சீனா முயற்சித்து வருகிறது.
கடல்சாார் ஆதிக்கத்தை தனது கைகளுக்கு கொண்டு வருவதன் மூலம் முழு உலகிலும் ஒரு வல்லரசாக வா்த்தக, இராணுவ கட்டமைப்புகளோடு எழுந்து நிற்க முடியும் என்று சீனா நினைக்கிறது.

0 Comments