ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்து வரும் ஆசிய கோப்பை 2022 இன் இரண்டு மைதானங்களில் ஒன்றான ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம், அதிக சர்வதேச போட்டிகளை நடத்தியதற்காக கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 ஆசியக் கோப்பை போட்டியை நடத்தியதன் மூலம் ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம் கின்னஸ் சாதனையில் இடம் பிடித்துள்ளது.
ஷார்ஜாவில் இதுவரை 9 டெஸ்ட், 244 ஒருநாள் மற்றும் 28 T20 போட்டிகள் உட்பட மொத்தம் 281 போட்டிகள் நடந்துள்ளன.
இதுவரை முன்னணியிலிருந்த, சிட்னி கிரிக்கெட் மைதானத்தின் சாதனையை முறியடித்தே ஷாா்ஜா மைதானம் இந்த சாதனையைப் படைத்துள்ளதாக சா்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஷார்ஜா மைதானம் உலகிலேயே அதிக ஒருநாள் போட்டிகளை நடத்தும் மைதானமாக பெயா் பெற்றுள்ளது.
இது நாட்டுக்கு மகிழ்ச்சியான தருணம் என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் கிரிக்கெட் புரவலர் அப்துல் ரஹ்மான் புகாதிர் கூறியுள்ளார்.
கடந்த 40 ஆண்டுகளாக ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் விளையாட்டை ரசித்து வரும் மக்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளதாக கல்ஃ நிவ்ஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

0 Comments