Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் சர்வதேச பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவதற்கு ரணில் ஆலோசனை!


ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரணையுடன் இலங்கையில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனையொன்றை முன்மொழிந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவாவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (30) காலை மணிலாவிலுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்தில் இடம்பெற்றது.

Post a Comment

0 Comments