Ticker

6/recent/ticker-posts

மாணவியை தும்புத் தடியால் தாக்கிய அதிபருக்கு இடமாற்றம்!


பாடசாலை மாணவி ஒருவரை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மத்திய மாகாண கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, கொட்டகலை – பத்தனை, போகஹவத்த சிங்கள மகா வித்தியாலய அதிபர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நுவரெலியா பிராந்திய கல்வி அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலையில் பத்தாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை அதிபா் தும்புத் தடியால் தாக்கியதாக ஊடகங்கள் மூலம் தெரியவந்ததையடுத்து, மத்திய மாகாண ஆளுநரின் சட்டத்தரணி லலித் யூ. கமகே சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதுடன், இது தொடர்பான அறிக்கையை வழங்குமாறு மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் குறித்த அதிபர் நுவரெலியா பிராந்திய கல்வி அலுவலகத்திற்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான பாடசாலை மாணவி தற்போது டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் தொடா்ந்தும் சிகிச்சை பெற்று வருகிறாா்.

-----------------------------------------------------------------------------------------------------

🔴🔴Think Media Network செனலை சப்ஸ்கிரைப் செய்வதற்கு கீழுள்ள 👇👇👇லிங்க்கை கிளிக் செய்யுங்கள்!



Post a Comment

0 Comments