வலப்பனை, குருதுஓயே பகுதியில் செங்குத்தான மலைச் சரிவு பகுதியில் மாணிக்கக் கற்கள் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட குழியிலிருந்து இருவரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
பிரதான வீதியில் இருந்து வெகு தொலைவில் உள்ள மிகவும் கடினமான பாதையின் ஊடாகவே இந்த இடத்திற்கு பயணிக்க வேண்டியுள்ளது. இந்த சம்பவத்தி்தில் வலப்பனையில் வசிக்கும் அறுபத்தொரு வயதான ஜெ. எம். அபேசிங் பண்டா மற்றும் முப்பது வயதான கே. எம். ருவன் குமார என்ற இருவா் மரணித்துள்ளனா்.
நேற்று இருவரும் வீட்டுக்கு வராததால், வலப்பனை தலைமைச் செயலகத்தில் புகார் அளித்து, உறவினர்கள் தேடியபோது, மேற்படி குழிக்குள் இறந்து கிடந்துள்ளனர்.
குழிக்குள் நீரிறைக்கும் இயந்திரம் ஒன்றும், குழிக்கு வெளியே ஜெனரேட்டர், உடைகள் மற்றும் உணவுப் பொட்டலங்களும் காணப்பட்டன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வலப்பனை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
%20(1).jpg)
%20(1).jpg)
%20(1).jpg)
0 Comments