Ticker

6/recent/ticker-posts

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையக திறப்பு விழாவில் ஜீவன் தொண்டமான் உட்பட இ.தொ.கா முக்கியஸ்தர்கள்


(க.கிஷாந்தன்)

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையக திறப்பு விழாவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானும் பங்கேற்றினார்.

 

அத்துடன், இ.தொ.காவின் தேசிய அமைப்பாளர் சக்திவேல், உப தலைவர் பாரத் அருள்சாமி மற்றும் இ.தொ.காவின் சில முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

 

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அழைப்பின் பேரில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட சிலர் இவ்வாறு சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.

 

அட்டன், டிக்கோயா,என்பீல்ட்,ஒட்டரி பிரதேசத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கைக்கான இந்திய தூதுவர் ஆகியோர் பிரதம அதிதிகளாக பங்கேற்றுள்ளனர்.

Post a Comment

0 Comments