Ticker

6/recent/ticker-posts

சென்னையில் 9வது உலக தமிழ் வம்சாவளி மாநாடு


 (க.கிஷாந்தன்)

 

60 நாடுகளிலிருந்து 1500ற்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொள்ளும் 9ம் ஆண்டு உலக தமிழ் வம்சாவளி மாநாடு 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6 மற்றும் 7ம் திகதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ளது.

 

குறித்த மாநாட்டிற்கு இலங்கையில் உள்ள தமிழர்களை அழைப்பதற்கு நான் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளேன் என உலக தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

 

கொழும்பில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

அது மட்டும் இல்லாமல் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், தமிழக முதல்வர் மு.கா.ஸ்டாலின் ஆகிய இருவரும் ஒரே எண்ணத்தில் எமது தொப்புள் கொடி உறவுகள் பாதிக்க கூடாது என்பதற்காக உதவிகளை செய்து வருகின்றார்கள்.

 

அதன் அடிப்படையில் இரு நாட்டு தூதர உறவும் மேம்படவும், இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு வாழ்வாதாரம் பெருக சிறு மற்றும் குருந் தொழில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இடம்பெறும் மாநாட்டில் இலங்கையில் உள்ள தமிழர்களை அழைப்பதற்கு நான் வந்துள்ளேன்.

 

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனை கருத்திற் கொண்டு இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் இலங்கைக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றது. தொடர்ந்தும் உதவிகளை வழங்கி வருவார்கள்.

 

அதேபோல், நாங்களும் இவர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப பல திட்டங்களை முன்வைத்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments