Ticker

6/recent/ticker-posts

டயானாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி நீதிமன்றில் மனு!


இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர் ஓஷல லக்மால் ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்

ஓஷல லக்மால் ஹேரத் தாக்கல் செய்த மனுவில், இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர், பொது பாதுகாப்பு அமைச்சர், சமகி ஜனபலவேகவின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார, தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள்,  பாராளுமன்ற செயலாளர் நாயகம் மற்றும் பலர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பிரித்தானிய பிரஜை என மனுதாரர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் அவ்வாறானவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதியற்றவர் எனவும், அது சட்டத்திற்கு முரணானது எனவும் குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments