(க.கிஷாந்தன்)
அட்டன் பிரதேச மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அம்பகமுவ பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவை அட்டன் D.K.W கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நடமாடும் சேவையில், பிறப்புச் சான்றிதழ் நகல்கள், திருமணச் சான்றிதழ் நகல்கள், தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களைப் பெறுதல், ஒரு நாள் சேவை, குழந்தைகள் தொடர்பான பிரச்சினைகள், மாணவர்கள் இடைவிலகல்கள், பதிவு செய்யப்படாத திருமணங்களைப் பதிவு செய்தல், பொது நலன் தொடர்பான பிரச்சினைகள், சிறுநீரகப் பிரச்சினைகள் மற்றும் ஊனமுற்ற நோயாளிகள் மற்றும் பொலிஸாரின் அறிக்கைகளைப் பெறுதல் உட்பட பல பிரச்சினைகளுக்கு இந்த நடமாடும் சேவை தீர்வுகளை வழங்கியது.
இந்த நடமாடும் சேவையில் அட்டன் டிக்கோயா நகர சபை தலைவர், அம்பகமுவ பிரதேச செயலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்கள், மற்றும் பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம சேவக உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
%20(1).jpg)
0 Comments