(க.கிஷாந்தன்)
கண்டி தெல்தெனிய மகாபெரியதென்ன தமிழ் மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இவ் வித்யாலயத்தின் அதிபர் எஸ்.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற விழாவில் பிரதம அதிதிகளாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் பிரஜா சக்தி அபிவிருத்தி செயல் திட்டத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் அருள்சாமி, மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் பெரியதம்பி விக்னேஸ்வரன், தெல்தெனியா வலயக் கல்வி பணிப்பாளர் குமாரிஹாமி கலந்து கொண்டிருந்தார்கள்.
இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த பாரத் அருள்சாமி,
இக்கல்லூரியின் இந் நூற்றாண்டு விழாவானது எம் மலையக இனத்தின் கல்விக்கான ஒரு அங்கீகாரம் ஆகும். மறைந்த பெருந்தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் இப்பாடசாலையின் அபிவிருத்தியில் பெரிதும் பங்காற்றி இருந்தார்.
எனது தந்தை அமரர்.அருள்சாமி கல்வி அமைச்சராக இருந்த காலப்பகுதியில் இப்ப பாடசாலையில் தகவல் தொழில்நுட்பத்திற்கான தனியான ஆய்வுக்கூடத்தை நிறுவியிருந்தார்.
இவர்கள் வழியில் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுக்கு முன்னதாக இப்ப பாடசாலையை இப்பகுதியில் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஓர் சிறந்த பாடசாலையாக மற்றும் வேலைத்திட்டத்தை ஜீவன் தொண்டமான் அவர்களுடைய வழிகாட்டலின் கீழ் நான் மேற்கொள்ள உள்ளேன்.
அது மாத்திரம் இன்றி 2023 ஆம் ஆண்டு கண்டி மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் தங்கிய பாடசாலைகள் ஐந்திணை அபிவிருத்தி செய்வதற்கான வேலை திட்டத்தையும் நாம் முன்னெடுத்து உள்ளோம்.
மேலும் இந்தியா வம்சாவளி மக்களான நாம் இலங்கையில் குடியேறி 200 வருடங்கள் பூர்த்தியாகும் சந்தர்ப்பத்தில் கல்வி ஒன்றின் மூலமே பல சவால்களையும் தகர்த்தெறிந்து ஏனைய சமூகங்களுக்கு இணையாக உள்ளோம்.
2025 ஆம் ஆண்டில் இலங்கையின் கல்விக் கொள்கையில் மாற்றம் ஏற்பட உள்ள நிலையில் எமது மாணவர்களை தகவல் தொழில்நுட்பத் துறையிலும் புலமை சார்ந்த அபிவிருத்தியிலும் தரம் உயர்த்துவது இளம் மக்கள் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் எமது தலையாயக் கடமையாகும்.
எனவே இந்த வரலாற்று சிறப்புமிக்க நாளில் கற்று உயர்ந்த சான்றோர்கள் உறுதுணையுடன் எமது இளைய தலைமுறையினரின் அபிவிருத்திக்கு நான் முன் நின்று செயல்படுவேன். என தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்வில் இப்ப பாடசாலையில் சேவையாற்றிய முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள் சாதனைகளை நிலை நாட்டிய மாணவர்கள் பல்கலைக்கழகம் கலாசாலைகளுக்கு தேவையான மாணவர்களுக்கு கௌரவிக்கும் நிகழ்வுகளும், நூற்றாண்டு சிறப்பு மலர் வெளியிடப்பட்டதுடன் பல கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
.jpg)
0 Comments