ஆசிய நாடுகளின் அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாட்டின் (ICAPP) 11வது அமர்வு இந்த ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல்லில் நடைபெறவுள்ளது.
இந்த வருடாந்த மாநாட்டில் 31 ஆசிய நாடுகளைச் சேர்ந்த 70 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நவம்பர் 17 முதல் 19 வரை நடைபெறும் இந்த மாநாட்டின் தொனிப்பொருள், 'உலகளாவிய அமைதி, செழிப்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு அரசியல் கட்சிகளின் பங்கு' என்பதாகும்.
ஜேவிபி கட்சியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க மற்றும் டொக்டா் நலிந்த ஜயதிஸ்ஸ ஆகிய இரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இவ்வருட ICAPP இன் பதினொன்றாவது மாநாட்டில் பங்குபற்றவுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
0 Comments