Ticker

6/recent/ticker-posts

ரயில் பாதைகளில் ஆணிகள் கழற்றப்படுவதால் அதிகரிக்கிறது ஆபத்து!


ரயில் பாதைகளில் ஆணிகள் கழற்றப்படும் சம்பவங்கள் குறித்து புகார்கள் கிடைத்து வருவதாகவும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்ய 300க்கும் மேற்பட்ட ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே துணைப் கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் களனிவெளி புகையிரதம், கரையோர புகையிரதம் மற்றும் பிரதான புகையிரத பாதைகளில் புகையிரதம் தடம் புரண்டதற்கு பிரதான காரணம் இதுவே என அறிய வந்துள்ளது. புகையிரத பாதைகளில் மற்றும் ஸ்லீப்பர் கட்டைகளில் பொருத்தப்பட்டிருக்கும் ஆணிகளை போதைப்பொருளுக்கு அடிமையானவர்களே கழற்றி வருவதாக  தெரியவந்துள்ளது. இவ்வாறு கழற்றப்படும் ஆணிகளை பழைய இரும்பு விற்கும் கடைகளுக்கே போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் விற்பனை செய்வதாகவும் அறிய வருகிறது.

இதனால் பயணிகளின் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இவ்வாறு ரயில் தண்டவாளத்தில் ஆணிகளை அகற்றுபவர்களை கண்டால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் ரயில்வே அதிகாரிகள் பொதுமக்களுக்கு தெரிவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments