பலஸ்தீனின் மேற்குக்கரையில் உள்ள ஜெனின் நகரத்தின் மீது இஸ்ரேல் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை நடாத்தி வருகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக ஐநா பொதுச்செயலாளர் என்டோனியோ குட்ரஸ் தனது கண்டனத்தை வெளியிட்டிருந்தார்.
ஐநா சபையின் இந்த கண்டனத்தை வாபஸ் பெறுமாறு இஸ்ரேல் அழுத்தங்களை பிரயோகி்க்க ஆரம்பித்துள்ளது. ஜெனின் தாக்குதல் தொடர்பாக இஸ்ரேலிய அரசாங்கத்தின் மீதான இந்த கண்டனத்தை வாபஸ் பெற ஐக்கிய நாடுகள் சபை மறுத்துள்ளதாக பிரஸ் டிவி இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை நகரமான ஜெனின் மற்றும் அதன் அகதிகள் முகாம் மீது நடாத்தப்பட்டு வரும் மிருகத்தனமான தாக்குதல்கள் தொடர்பாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கம் மீது கடுமையான கண்டனத்தை என்டணியோ குட்ரஸ் வெளியிட்டு இருந்தார்.
ஜெனின் மீதான இஸ்ரேலிய தாக்குதல் குறித்து பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்ததாக ஐ.நா.வின் துணை செய்தித் தொடர்பாளர் ஃபர்ஹான் ஹக் இன்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார்..
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ஜெனின் அகதிகள் முகாம் மீதான தாக்குதலால் கோபமடைந்த குட்டெரெஸ், பாலஸ்தீனிய குடிமக்களுக்கு எதிரான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கத்தின் வன்முறைச் செயல்களை கடந்த வியாழனன்று கண்டனம் செய்ததோடு, இஸ்ரேலிய அரசாங்கம் பலஸ்தீன் மக்களுக்கு எதிராக அதிக சக்தியைப் பயன்படுத்துவதாகவும் விமர்சித்திருந்தார்.
காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி மற்றும் மனிதாபிமான உதவிகள் சென்றடைவதை தடுக்கும் இஸ்ரேலின் செயற்பாட்டையும் குட்ரெஸ் கடுமையாக கண்டித்துள்ளார்.

0 Comments