ஜனாதிபதி தேர்தலின் தபால்மூல வாக்களிப்பு அமைதியான முறையில் நடைபெற்று வருவதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு சம்பவத்தை தவிர நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் தபால் மூல வாக்களிப்பு சுமூகமான முறையில் நடைபெற்று வருவதாக பெவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டிஆரச்சி தெரிவித்துள்ளார்.
நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் தபால் மூல வாக்களிப்பு அமைதியான முறையில் நடைபெற்று வருவதாக கெபெ அமைப்பு அறிவித்துள்ளது.
இன்று காலை முதல் தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் எவ்வித முறைப்பாடுகளும் பதிவாகவில்லை என கெபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை எவ்வித வன்முறை சம்பவங்களும் பதிவாகவில்லை என தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையத்தின் தேசிய ஏற்பாட்டாளர் ரசாங்க ஹரிஸ்சந்திர கூறுகின்றார்.
0 Comments