நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்தால் நாட்டை விட்டு் வெளியேறும் திட்டத்தில் அரசின் முக்கிய உறுப்பினர்கள் இருப்பதாகவும் அவர்களுள் ஜனாதிபதிக்கு மிக நெருங்கியவர்களும் உள்ளடங்குவதாக அரசின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலமாக தகவல் கிடைத்துள்ளது.
இறுதித் தருணம் வரையில் ஜனாதிபதியின் வெற்றிக்காக பாடுபடும் இவர்கள் அதற்காக சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபட தயாராகவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்து முயற்சிகளும் தோல்வியடையும் பட்சத்தில் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவர்களில் அதிகமானோர் அமெரிக்க பிரஜா உரிமை பெற்றவர்கள் ஆவர்.
இத்திட்டமானது ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியவரும் பட்சத்தில் அவர்கள் தமது ஆரதவை எதிரணி பக்கம் தெரிவிப்பதை தடுக்கும் பொருட்டு இவ்விடயம் இரகசியமாக பேணப்பட்டு வருகிறது.
இத்திட்டத்திற்காக வெளிநாடுகளில் வசிக்கும் இவர்களது உறவினர்கள் அறிவுறுத்தப்பட்டு தயார்நிலையில் வைக்கபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Comments