பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமவைக் கைதுசெய்ய சர்வதேச பொலிஸாரின் உதவியை எதிர்பார்த்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வந்துரம்ப பகுதியில் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்காக
அமைக்கப்பட்ட தேர்தல் மேடையை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில், நிஷாந்த
முத்துஹெட்டிகமவைக் கைதுசெய்யுமாறு அண்மையில் பத்தேகம நீதிமன்றத்தால்
பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
எதுஎவ்வாறு இருப்பினும் அவர் தற்போது வௌிநாட்டுக்கு சென்றுள்ளார்.
இது குறித்து அத தெரண பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹனவிடம் வினவியது.
நிஷாந்த முத்துஹெட்டிகமவைக் கைதுசெய்ய சர்வதேச பொலிஸாரின் உதவியை எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளனர்.

0 Comments