ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக களம் இறங்கியுள்ள மைத்திரிபால
சிறிசேனவை ஆதரித்து பிரச்சாரங்களை மேற்கொள்வது தொடர்பில் கூட்டமைப்பினர்
வவுனியாவில் கலந்துரையாடி உள்ளனர். வவுனியா, வைரவ புளியங்குளம் பகுதியில்
உள்ள ரெலோ அலுவலகத்தில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என கூட்டமைப்பு தெளிவாக
அறிவிக்காத நிலையில் கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் மைத்திரிபால
சிறிசேனவுக்கு ஆதரவான கருத்துக்களை மக்கள் மத்தியில் தெரிவித்து வந்தனர்.
இந் நிலையில் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான
செல்வம் அடைக்கலநாதன், வினோ, சிவசக்தி ஆனந்தன், வடக்கு சுகாதார அமைச்சர்
ப.சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன்,
ம.தியாகராஜா, இ.இந்திரராஜா, புளொட் அமைப்பின் மத்தியகுழு உறுப்பினர்
சந்திரகுலசிங்கம், சுத்தானாந்தா இந்து இளைஞர் சங்க தலைவரும் தமிழரசுக்
கட்சி மத்தியகுழு உறுப்பினருமான ந.சேனாதிராஜா, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச
சபை உபதலைவர் து.ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் ந.சேனாதிராஜா தலைமையில்
இடம்பெறவுள்ள பிரச்சார நடவடிக்கைகளை கூட்டமைப்பு தீவிரமாக மேற்கொள்ள
தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான செய்தி இணையம் மற்றும் முக நூல்களில் பிரசுரமாகியுள்ளமையும் குறிப்பிடத் தக்கது.

0 Comments