சுவீடனில் கடந்த வியாழக்கிழமை முதல் தொடராக இரண்டு பள்ளிவசல்கள் தாக்கப்பட்டிருன்கின்றன. பள்ளிவாசலின் ஜன்னல்கள் ஊடாக தீ மூட்டப்பட்டிருப்பதாகவும், இனம் தொியாத நபா்கள் தொடராக இந்த வேலையை செய்து வருவதாகவும் சுவீடன் பொலிஸாா் தொிவித்துள்ளனா்.
சுவீடன் எக்ஸ்கில்ருனா நகரத்திலுள்ள இரண்டு பள்ளிவாசல்களே இவ்வாறு தாக்கப்பட்டதாகவும் இதில் ஐந்து போ் காயமமைந்ததாகவும் பொலிஸாா் தொிவிக்கின்றனா். முதலாவது பள்ளிவாசல் எரியூட்டப்ட்டு சிறிது நேரத்தில் அடுத்த பள்ளிவாசலும் எாியூட்டப்பட்டிருப்பதாகவும், இந்த வருடத்திற்குள் மொத்தம் 12 பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டிருப்பதாகவும் சுவீடன் பொலிஸாா் தொிவித்திருக்கின்றனா்.


0 Comments